இந்துத்துவம் மேலெழுந்த வாலாறு – தொலைதூரத் தேசியம்- காந்தியும் இந்துத்துவவாதிகளும் – இரட்டைக் கோபுரத் தாக்குதலும் அமெரிக்க இந்துத்துவமும் – இன்டெர்நெட் இந்துத்துவத்தின் யூத பயங்கரவாதத் தொடர்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் குறித்து இந்த நூலில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
இந்துத்துவம் அது தோன்றிய காலத்திலிருந்தே வெளிநாட்டு பாசிஸிட் மற்றும் சியோனிஸ்ட் பயங்கரவாத அமைப்புகளுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. தொடக்க கால ஆர்எஸ்எஸ் அமைப்பு முசோலினி, ஹிட்லர் போன்றோருடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. அதன் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் மூஞ்சே இத்தாலி சென்று முசோலினியைச் சந்தித்து, அவருடைய பாணியில் தங்கள் அமைப்பை அமைத்துள்ளதாகச் சொல்லியதையும் முசோலினியின் பாசிச அறிக்கையை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டதையும் நாம் அறிவோம்.