இந்திய வழி / THE INDIA WAY

LKR1,750.00

3 in stock

Author: எஸ். ஜெய்சங்கர்

உலகப் படிநிலை வரிசையில் வலிமையான நாடாக இந்தியா உயரும்போது, தன்னுடைய நலனுக்கான செயல்கள் எவை என்பதைத் தொலைநோக்கோடு சிந்திப்பதுடன் அதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் வேண்டும். இப்புத்தகம் அந்த நோக்கிலான ஒரு முயற்சியே. வெளியுறவுக் கொள்கை குறித்து இந்தியர்களிடையே நேர்மையான விவாதம் நடைபெறுவதை ஊக்குவிப்பதுதான் நோக்கம், அதை உலகம் காண முடியாமல் திரையிடுவதல்ல. சர்வதேச உறவுகள் என்பவை பிற நாடுகளைப் பொருத்தவைதான் என்றாலும் அவை பற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதாலோ, அக்கறையின்றி இருப்பதாலோ அந்த உறவுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை எந்த வகையிலும் குறைத்துவிடாது. சர்வதேச அரங்கில் ஏதாவது நடந்ததும் அதைப் பற்றிப் பேசி, இப்படிச் செய்திருக்கலாம் – அப்படிச் செய்திருக்கலாம் என்று விமர்சிப்பதைவிட எதிர்காலத்தில் உறவுகள் எப்படி இருக்கும், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று முன்கூட்டியே எதிர்பார்த்து, ஆராய்ந்து முடிவெடுப்பது நன்மையைத் தரும்”.

3 in stock