கருணாமிர்தசாகரம், யாழ்நூல் என்ற இரண்டு முதன்மையான இசையியல் ஆய்வு நூல்களை ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் முறையே உருவாக்கினார்கள். தமிழகப் பண்பாட்டுக் களத்தில் இசை வரலாறு குறித்த மீள் வாறு குறித்த மீள் கண்டுபிடிப்புகளை இவர்கள் செய்தார்கள். இதனை மேலும் மேலும் முன்னெடுக்கும் தமிழ்ச் சூழல் இருப்பதாகக் கூற முடியவில்லை. இவ்விரண்டின் பாடுபொருள், அது உருவான வரலாறு ஆகிய பல செய்திகளை இக்குறுநூல் பேசுபொருளாகக் கொண்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் சுளாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், புதுமைப் 1954..,) பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்