ஆடு ஜீவிதம் | Aadu Jeevitham (Goat life)

Publication :
LKR1,950.00

9 in stock

Author: Benyamin

நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைபார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

9 in stock