அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகமும் காலனிய அடிச்சுவடுகளும்( கி.பி 1547-1792)

Publication :
LKR1,820.00

3 in stock

Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

கடற்கரையிலிருந்து கோவா, கொச்சி, மெலாகா, அச்சே மற்றும் மணிலாவிற்கு மேற்கொண்ட அடிமை வணிகம், ஸ்பானிஷ் வணிகர்கள் பசிபிக் கடல் கடந்து மெக்சிகோவிற்க்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பி விற்றது விவரிக்கப்பட்டுள்ளது. டச்சுக் கிழக்கிந்திய குழுமம் தமிழக அடிமைகளை வாங்கி ஜகார்த்தா, அச்சே, மெலாகா, பான்டன், மியான்மர், கேப்டவுன் மற்றும் கொழும்புக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பி வணிகம் மேற்கொண்டதும், அடிமைகளின் சமூக வாழ்வியல் உண்மைகள் பற்றியும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தென்அட்லாண்டிக்கிலுள்ள புனித ஹெலினா தீவு காலனிக்கும், சுமத்ராவிலுள்ள பெங்குலுவுக்கும் அடிமைகளை ஆங்கிலக் குழுமம் ஏற்றுமதி செய்தது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து பிரஞ்சுக்காரர்கள் மொரீஷியஸ், ரீயூனியன், கொமோரஸ் தீவுகளுக்கு நடத்திய அடிமை வணிகம் ஆய்வு செய்யப்படுகிறது. டேனிஷ்காரர்கள் ஆட்சியின் கீழ் தரங்கம்பாடியில் அடிமை முறை, மற்றும் அடிமை வணிகம் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழகம் காலனிய ஆட்சிக்கு மாறுவது மற்றும் அய்ரோப்பியர்கள் தமிழகத்திலிருந்து நடத்திய உலகளாவிய அடிமை வணிகத் தாக்கம் விரிவாக அலசப்பட்டுள்ளது.

3 in stock