அன்னா ஸ்விர் கவிதைகள்

LKR792.00

2 in stock

Author: அன்னா ஸ்விர்

இரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்டும் அவரது கவிதைகள் பெண் உடலின் வாதைகளையும் சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவுசெய்கின்றன. நாஜி எதிர்ப்புக் குழுவில் பணிபுரிந்தவரான அன்னா ஸ்விர் தன் அனுபவங்களை உக்கிரமான கவிமொழியில் நமக்குக் கடத்துகிறார். இறத்தல் மிகக் கடினமானது எல்லா வேலைகளையும் விட. முதியவர்களும் நோயாளிகளும் அதிலிருந்து விலக்களிக்கப்படவேண்டும். பல்வேறு உணர்வுநிலைகளில் இருந்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. கவிஞர் சமயவேல் மொழிபெயர்ப்பில் சிக்கலில்லாமல் அன்னா ஸ்விர் தமிழுக்கு வந்துள்ளார்.

2 in stock