அண்மைக்காலத்து இந்திய மெய்ப்பொருளியல் (RECENT INDIAN PHILOSOPHY)

LKR1,100.00

1 in stock

Author: C.Ramalingam

உலகில் கருத்தியல்பானவற்றை மட்டும் ஆராயும் முயற்சியன்று. இது அன்றாட வாழ்வில் எழுகின்ற சிக்கல்களையும் ஆராய்ந்து வழிகாட்ட வல்லனவாதல் வேண்டும், இதே சமயத்தில் கடந்த நிலை வாழ்வையும் போற்றுவதாதல் வேண்டும் என்பது நாம் கருதியுள்ள அறிஞரது ஒருமித்த கருத்தாகும். உலகைப் பற்றிய ஒற்றுமை நோக்க அமைவாக மட்டும் தத்துவத்தைக் கொள்ள வில்லை. வாழ்க்கையைப் பற்றிய நோக்க அமைவாக என்றும் क्रीण (Welten cheuung and lebensan chcvung) வழிகாட்ட வல்லதாகவும் தத்துவம் அடைய வேண்டும் என்பது இவ்வறிஞரது கருத்தாகும். அரவிந்தர் குறிப்பாக, நமது அறிவாற்றலின் எல்லைகளை உணர்த்தினார். இராதாகிருஷ்ணன் அறிவாற்றலோடு அகவுணர்வும் இணைய வேண்டும் என்றார். கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் தலைமை சான்றவர்களாகத் திகழ்ந்த பேரறிஞர்களது தத்துவக் கருத்துகளை விளக்குவதே இம் முயற்சியாகும். ஒவ்வோர் அறிஞரும் தேர்ந்த துறை வெவ்வேறாகும். தத்துவம், சமயம், சமுதாயத் தொண்டு என்ற தலைப்புகளில் இவ் அறிஞரது கருத்துகளை அறிய முற்படுகிறோம். இவ் அறிஞர் அனைவருக்கும் பின்னணியாக அமைவன, பிரம்ம, ஆரிய, பிராத்தனை சமாஜத்தின் தொண்டுகளாகும்.

1 in stock