ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ‘இருநூற்றாண்டு இதழ்கள் எனும் கண்காட்சி நிகழ்ந்தது. கண்காட்சியின் திறப்புரையாக பேசிய உரையே இக்குறுநூல். இதழ்கள்’ எவ்வாறு வரலாற்று மூலங்களாக அமைகின்றன? என்பது குறித்த உரையாடல் இது. சென்னை இலெளகிக சங்கம், அயோத்திதாசர் செயல்பாடுகள் போன்றவை இதழ்கள் வழிநான் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டவை. சுவடிகள் போன்று இதழ்கள் குறுகிய காலத்தில் அழிந்துவிடக்கூடியவை. அவற்றிலிருந்து எவ்வாறெல்லாம் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்பதைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளது இக்குறுநூல்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், 1954…) புதுமைப்பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்