இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார்.
LKR650.00
4 in stock