இத்தாலிய மருத்துவர், கல்வியாளர், தனது கல்வி முறையை அறிவியல் பூர்வ கல்விமுறை (Scientific Pedagogy) என்று அவர் அழைத்தார். இத்தாலிய பாசிச முசோலினி அறிமுகம் செய்த இரண்டு வயதில் கல்வி, 10 வயதில் ராணுவ சேவை எனும் கல்வி முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததால் நாடு கடத்தப்பட்டார். தமிழில் மழலையர் கல்வி எனும் தலைப்பில் வெளிவருகின்ற இந்த பிரமாண்ட நூல் கல்வியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாகும்.
இந்நூல் தமிழில் நன்கு அறியப்பட்ட மூத்த கல்வியாளர் ஆயிஷா நடராசனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் ‘ஆயிஷா. ‘இது யாருடைய வகுப்பறை’, ‘கற்றல் என்பது யாதெனில் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.