‘வில்லியம் ஷேக்ஸிபியர்” உலக மகா கவி! அவரின் அரிய காதல் சித்திரம் ”ரோமியோ – ஜூலியட்” இந்தக் கதையை படிப்பதன் மூலம் உண்மைக் காதலின் வலிமையையும், தியாக உணர்ச்சியையும் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அன்றியும் இக்கதையில், கட்டாயக் கல்யாணத்தைக் கண்டிப்பதுடன், காதல் மணத்திற்கு முதலிடம் தரப்பட்டிருக்கிறது. இவை நம் நாட்டிற்கும் இன்று தேவை என்பதறிந்து இதை எழுதினேன்.
இந்தக் கதையின் மூலம் ஷேக்ஸ்பியருடையது தான். அதை ஆதாரமாகக் கொண்டு முடிந்த வரை எழுதியுள்ளேன். உங்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.